தமிழிசை கருவிகளுக்கு தீண்டாமை என்ற தலைப்பில் திருமுதுகுன்றத்தில் நடந்த பிரச்சார காட்சிகள் 22-03-2012,23-12-2012 .......
கடந்த ஆறு வருடங்களாக திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோவிலில் அர்த்தசாமம் பூசை மற்றும் திருவிழா காலங்களில் போது தமிழிசை கருவிகள் ஆகிய கைலாய வாத்தியங்கள் வாசிக்கப்பட்டு வந்தது .
கடந்த ஆண்டு 2011-ஜூலை மாதத்தில் இருந்து கோவில் நிர்வாகிகள் தமிழிசை கருவிகள் வசிக்ககூடாது என கூறினார்கள். அதற்கு அவர்கள் சரியான காரணங்களை கூறவில்லை. மனுக்கள் மூலம் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் தொடர்பு கொன்றும் எந்த ஒரு விடையும் சிவனடியார்களுக்கு கிடைக்கவில்லை.
வாசிக்க கூடாது என்பதற்கு அவர்கள் கூறிய காரணங்கள் பொது மக்களுக்கு இடையூறு என்றும் கோவிலின் ஆகம விதிகளுக்கு ஊகதந்ததல்ல எனவும் கூறினார்.
இதை அடுத்து சிவனடியார்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உதவியுடன் மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . அதன் தொகுப்புகளை இங்கே காணலாம் ,